உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்தியாவின் கனவு சிதறுமா?
8 மார்கழி 2024 ஞாயிறு 15:33 | பார்வைகள் : 256
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் தோல்வி இந்தியாவிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை குறைத்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.
தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா பதிலடி கொடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் இந்த வெற்றி இந்திய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தத் தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது, இந்தியா 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.
அதே நேரம் தென்னாப்பிரிக்கா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்கான அவர்களது வாய்ப்பு உறுதியாகிவிடும்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இனிவரும் 3 போட்டிகளிலும் இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டும்.
ஒருவேளை இந்த போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி தோற்றாலும், , இலங்கையின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பு அமையும்.
மேலும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளில் தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு அந்த வாய்ப்பும் சாதகமாக அமையும்.