Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சாரதிகளுக்கு மது கொடுத்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்!

இலங்கையில் சாரதிகளுக்கு மது கொடுத்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்!

8 மார்கழி 2024 ஞாயிறு 17:04 | பார்வைகள் : 2957


வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக் கொடுத்து இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அதிலிருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை செட்டியார் தெருவில் உள்ள தங்க விற்பனை நிலையத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சுமார் 15 பொலிஸ் பிரிவுகளில் அடிக்கடி இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்