Essonne : வீதியில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!
9 மார்கழி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 1519
Jérémie Greco எனும் 54 வயதுடைய ஒருவரது சடலம் கடந்த வெள்ளிக்கிழமை Orsay (Essonne) நகர்ல் மீட்கப்பட்டது.
கொள்ளையர்கள் சிலர் அவர் பயணித்த மோட்டார்சைக்கிளை கொள்ளையிட்டுச் சென்றதாகவும், அதன்போது அவர் மிக மோசமாக தாக்கப்பட்டதாகவும் முதல்கட்ச விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அழைக்கப்படுவதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்பாக அங்கு வைத்து குறித்த நபர் சில கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 150 மீற்றர் தொலைவில் அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும், கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.