Paristamil Navigation Paristamil advert login

காஷ்மீரை தனிநாடாக்க விரும்பும் அமைப்புடன் சோனியாவுக்கு தொடர்பு: பா.ஜ., குற்றச்சாட்டு

காஷ்மீரை தனிநாடாக்க விரும்பும் அமைப்புடன் சோனியாவுக்கு தொடர்பு: பா.ஜ., குற்றச்சாட்டு

9 மார்கழி 2024 திங்கள் 04:00 | பார்வைகள் : 562


காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் எனக்கூறும் அமைப்புடன், காங்கிரஸ் தலைவர் சோனியா தொடர்பில் உள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பா.ஜ., கூறியுள்ளதாவது: எப்.டி.எல்., - ஏ.பி., எனப்படும் ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்கள் மன்றத்தின் துணை தலைவராக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளார். இந்த அமைப்புக்கு அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசின் தொண்டு நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது.

எப்.டி.எல்., - ஏ.பி., அமைப்பு, காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த அமைப்புடன் சோனியா தொடர்பு வைத்திருப்பது, இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கையும், அத்தகைய தொடர்புகளின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

சோனியா தலைமையில் செயல்படும் முன்னாள் பிரதமர் ராஜிவின் தொண்டு நிறுவனம், ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்துஉள்ளது. சோரஸ் நிதியுதவி அளிக்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவரான சலீல் ஷெட்டி, ராகுலின் பாரத ஒற்றுமை அமைதி யாத்திரையில் அவருடன் சேர்ந்து பங்கேற்றுள்ளார்.

தொழிலதிபர் அதானி குறித்த ராகுலின் நேரடி போட்டியை ஜார்ஜ் சோரஸ் நிதி அளிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும் புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அதானி மற்றும் பிரதமரை விமர்சனம் செய்ய, இந்த அமைப்பை ராகுல் ஓர் கருவியாக பயன்படுத்துகிறார். இது, நம் நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை காட்டுகிறது. காங்கிரஸ் எம்.பி., சசி தரூரோ, ஜார்ஜ் சோரஸ் தன் பழைய நண்பர் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இது கவனிக்கத்தக்க ஒன்று. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இந்நிலையில், சோனியா மீதான குற்றச்சாட்டு குறித்து ராகுலிடம் பார்லி.,யில் 10 கேள்விகளை முன்வைக்க உள்ளதாக பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்