நெதர்லாந்து அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பு - 5 பேர் பலி
9 மார்கழி 2024 திங்கள் 07:41 | பார்வைகள் : 1186
நெதர்லாந்து டென் ஹாக் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடிப்பினால் அந்த குடியிருப்பின் பாதிக் கட்டடம் சரிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.
சனிக்கிழமை அதிகாலை 6.15 மணியளவில் டென் ஹாக் நகரத்திலுள்ள மூன்றடுக்கு குடியிருப்பினுள் பயங்கர சத்ததுடன் இந்த வெடிப்பு ஏற்பட்டது.
வெடிப்பு ஏற்பட்ட பகுதியைச் சுற்றியிருந்த சுமார் 40 குடும்பங்களைச் சார்ந்த மற்ற குடியிருப்புவாசிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இடமாற்றப்பட்டு வேறிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமா ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து தங்களது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் வெடித்தது என்ன? அது எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
வெடிப்பு ஏற்பட்ட சமயத்தில் அப்பகுதியில் ஒரு கார் அதிவேகமாக கடந்து சென்றதுள்ளதாகவும், இதுகுறித்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.