பகலிரவு போட்டியில் மட்டும் ஏன் பிங் கலர் பால்?
9 மார்கழி 2024 திங்கள் 07:59 | பார்வைகள் : 240
பகலிரவு போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்துவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் வழக்கமாக சிவப்பு நிற பந்து தான் பயன்படுத்தப்படும்.
பெர்த்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் கூட இந்த பந்துதான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அடிலைடு மைதானம் நடக்கும் போட்டியில் 2வது டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிற பந்திற்கு பதிலாக பிங்க் கலர் பாலை பயன்படுத்தவுள்ளனர். குறிப்பாக பகலிரவாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் இதுதான் உபயோகப்படுத்தப்படுகிறது.
ஏனென்றால், சிவப்பு நிற பந்து இரவு நேரங்களில் லைட் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரியாது. ஆனால், பிங்க் நிற பந்துகள் நன்றாக தெரியும். இது பேட்ஸ்மேன்களும் பீல்டர்களுக்கும் பந்தை எளிதாகப் பாலோ செய்ய உதவுகிறது.
ஒரு நாள் போட்டிகளுக்குப் பயன்படுத்துவதைப் போல வெள்ளை நிற பந்துகளைப் பயன்படுத்தலாமே என்றால், டெஸ்ட் போட்டியில் வீரர்கள் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து இருப்பதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.