சூர்யா 45 படத்தில் இருந்து திடீரென விலகிய ஏ.ஆர்.ரகுமான் - காரணம் என்ன?

9 மார்கழி 2024 திங்கள் 08:37 | பார்வைகள் : 3230
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. அதையடுத்து தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் தனது 45வது படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் கமிட்டாகி இருந்தார். ஆனால் தற்போது தனது குடும்பத்தில் நடைபெறும் அசாதாரணமாக சூழல் காரணமாக இந்த படத்தில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகி இருக்கிறார்.
அதனால் அவருக்கு பதிலாக சூர்யா 45வது படத்தில் இசையமைக்க சாய் அபியங்கர் என்ற இளம் இசையமைப்பாளர் கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலை சூர்யா 45வது படத்தை தயாரிக்கும் ட்ரீம்ஸ் வாரீயர் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளது. மேலும் இந்த இசையமைப்பாளர் சாய் அபியங்கர், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் என்ற படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார்.