மீண்டும் பிரதமருக்கான தேடுதல்!
9 மார்கழி 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 1945
நோர்து-டேம் தேவாலயம் திறப்புவிழா கண்டதன் பின்னர் தற்போது மீண்டும் நாட்டுக்கான புதிய பிரதமருக்கான தேடுதல் பணி ஆரம்பித்துள்ளன.
புதிய பிரதமரை ஓரிரு மணிநேரங்களில் நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி மக்ரோனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் தலைவர் Yaël Braun-Pivet தெரிவிக்கையில், 'rapidement' எனும் வார்த்தையை பயன்படுத்தி விரைவாக பிரதமரை நியமிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி மக்ரோனின் நீண்டகால நண்பரும் ஜ்ஜ்க் கட்சியின் தலைவருமான François Bayrou, 'இதனை இப்படியே கொண்டுசெல்ல முடியாது. புதிய பிரதமரைக் கண்டுபிடிக்க நான் மக்ரோனுக்கு உதவிட இருக்கிறேன்.!' என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த சில நாட்களுக்குள் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.