கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம்...
9 மார்கழி 2024 திங்கள் 08:47 | பார்வைகள் : 149
கார்த்திகை திருநாளில் மட்டும் இந்த ஒரு ஸ்பெஷலான கார்த்திகை அப்பத்தை செய்து பூஜை செய்ய மறந்துறாதீர்கள்… இப்படி இந்த ஸ்பெஷலான கார்த்திகை அப்பத்தை எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாமா…
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் அரிசி மாவு,
½ கப் வெல்லம்,
1 டீஸ்பூன் தேங்காய் துருவல்,
கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்,
1 வாழைப்பழம்,
வறுக்கத் தேவையான எண்ணெய்
1 டீஸ்பூன் நெய்
செய்முறை :
முதலில் ஒரு பாதிரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். வெல்லம் நன்கு கரைந்து கொதித்த பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெல்லம் கரையும் வரை மட்டும் காய்ச்ச வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவை கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஊற வைத்த அரிசி மாவுடன், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், 1 வாழைப்பழம், ரெடி செய்துள்ள வெல்லம் பாகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் இதனுடன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு இட்லி மாவை விட சற்று கட்டியாகவும்,தோசைமாவை விட சற்று இலகுவாகவும் இருக்கும் படத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அப்பத்தை வறுக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு சிறிய அளவு ஆழமான கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். ஒரு நேரத்தில் ஒருமுறை மட்டும் ஊற்றவும். ஒன்றுக்கு மேல் ஊற்ற வேண்டாம். ஏனெனில் அது ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு வரும். எண்ணெயில் போட்டவுடன், அப்பம் மெல்ல எழும்பி, பஞ்சு போல இருக்கும் பொழுது மறுபுறம் புரட்டவும் பிறகு இருபுறமும் வெந்ததும் வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து எண்ணெயை வடிகட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சூப்பரான சுவையான கார்த்திகை மாத ஸ்பெஷல் வெப்பம் தயாராகி விடும்.இந்து ஒரு அப்பத்தை கார்த்திகை திருநாளில் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை என அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.