Paristamil Navigation Paristamil advert login

RER A : சேவைத்தடை!!

RER A : சேவைத்தடை!!

9 மார்கழி 2024 திங்கள் 13:35 | பார்வைகள் : 2300


இன்று டிசம்பர் 9, திங்கட்கிழமை RER A சேவை ஒரு பகுதியாக தடைப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிவரை தடை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Nation முதல்  Charles de Gaulle-Etoile நிலையம் வரை சேவை தடைப்பட்டுள்ளதாகவும், Auber நிலையத்தில் காலை 5.45 மணி அளவில் ஏற்பட்ட தீ பரவலை அடுத்து இந்த போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

முதலில் காலை 10 மணிக்கு போக்குவரத்து சீரடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாலை 6 மணி வரை திருத்தப்பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, Aéroport Ch. de Gaulle தொடக்கம் St-Rémy-lès-Chevreuse வரை RER B சேவைகள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்