Paristamil Navigation Paristamil advert login

சிவகார்த்திகேயன் 25வது படத்தின் அதிரடி !

சிவகார்த்திகேயன் 25வது படத்தின் அதிரடி !

9 மார்கழி 2024 திங்கள் 14:23 | பார்வைகள் : 449


சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க இருந்தார் சுதா கொங்கரா. ஆனால் அந்த படத்தில் நடிப்பதாக கூறிவந்த சூர்யா, திடீரென்று கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் கமிட்டாகி விட்டார். அதன் காரணமாக புறநானூறு கதையை சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி ஓகே செய்தார் சுதா. இந்நிலையில் அமரன் படத்தின் வெற்றி காரணமாக சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமான புறநானூறு படத்தின் பட்ஜெட் 140 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதோடு இந்த படத்தின் வில்லனாக ஜெயம்ரவி நடிக்கும் நிலையில் புஷ்பா- 2 படத்தில் 'கிஸ்ஸிக்' பாடலுக்கு நடனமாடி இருந்த ஸ்ரீ லீலா நாயகியாக நடிக்கிறார். அதர்வாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் காரணமாக இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலிருந்து அவரது இந்த 25 வது படம் பிரமாண்டமாக உருவாகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்