Aquaboulevard : நீரில் மூழ்கிய சிறுமி.. தீவிர சிகிச்சையில்..!!
9 மார்கழி 2024 திங்கள் 17:03 | பார்வைகள் : 1553
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Aquaboulevard விளையாட்டு அரங்கில் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நேற்று டிசம்பர் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய சிறுமி ஒருவர் அவரது நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் வருகை தந்துள்ளார். சில நிமிடங்களில் குறித்த சிறுமி தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கியுள்ளார்.
அங்கு கடமையில் நின்ற உயிர்க்காப்பாளர் உடனடியாக பாய்ந்து அவரைக் காப்பாற்றியுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.