அமெரிக்காவில் இருந்து பரிசுக்கு வந்த பெண்ணுக்கு - ஐந்து ஆண்டுகள் சிறை!!
9 மார்கழி 2024 திங்கள் 17:56 | பார்வைகள் : 2491
பயணச்சிட்டை மற்றும் செல்லுபடியான கடவுச்சீட்டு இல்லாமல் அமெரிக்காவில் இருந்து பரிசுக்கு வருகை தந்த பெண் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டுள்ளது.
57 வயதுடைய Svetlana Dali எனும் அமெரிக்காவில் வசிக்கும் இரஷ்யப் பெண் ஒருவர் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி நியூயோர்க்கில் இருந்து பரிசுக்கு வந்த விமானம் ஒன்றில் பயணித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள JFK விமானநிலையத்தில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டுக்களையும் மீறி விமானத்தில் ஏறியுள்ளார்.
பின்னர் விமானம் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் தரையிறங்கியபோதே அவரிடம் பயணச்சிட்டையும், செல்லுபடியான கடவுச்சீட்டும் இல்லை என தெரிவிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.
அவர் எவ்வாறு அனைவரது கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு விமானத்தில் ஏறினார் என்பதும், ஏன் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டுள்ளது. அவரிடம் சந்தேகத்துக்கிடமான பொருட்களோ, தடயங்களோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.