ஒன்றாரியோ மாகாணத்தில் இருமலால் பாதிக்கப்படும் மக்கள்
9 மார்கழி 2024 திங்கள் 18:17 | பார்வைகள் : 1032
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் தொடர் இருமல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் தொடர் இருமல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
ஒன்றாரியோ பொது சுகாதார அலுவலகம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடர் இருமல் நோய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் பாதிப்புகளை வரையறுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.