எலிசே மாளிகையில் அனைத்துக் கட்சி சந்திப்பு! - மரீன் லு பென் கட்சிக்கு அழைப்பு இல்லை!!
10 மார்கழி 2024 செவ்வாய் 07:33 | பார்வைகள் : 1715
ஜனாதிபதி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சி சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. இந்த சந்திப்புக்கு மரீன் லு பென்னின் RN கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாட்டின் புதிய பிரதமரை தேடும் முயற்சியில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இன்று இடம்பெற உள்ளது.
இந்த சந்திப்பில் சோசலிச கட்சி, கமியூனிஸ்ட் கட்சிகள் போன்றனை பங்கேற்க உள்ளன. பிற்பகல் 2 மணிக்கு எலிசே மாளிகையில் சந்திப்பு இடம்பெற உள்ளது.
RN மற்றும் LFI கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.