துருக்கியில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து - 5 வீரர்கள் பலி
10 மார்கழி 2024 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 713
துருக்கியின் தென்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் நடைபெற்ற வழக்கமான பயிற்சி விமானத்தில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் ஐந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து இரண்டாக உடைந்துள்ளது.
காயமடைந்த ஒரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த சோக சம்பவம் துருக்கியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.