Paristamil Navigation Paristamil advert login

சிரியாவில்  ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவில்  ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

10 மார்கழி 2024 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 1334


சிரியாவில் உள்ள ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில் இஸ்ரேல் தங்களது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிளர்ச்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்களின் கையில் ரசாயன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் சென்று சேர்வதை தடுக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சிரியாவின் ஆயுதக் கிடங்குகள் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய கிளர்ச்சிப் படைகளின் வளர்ச்சியை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், சிரியா முழுவதும் உள்ள ஏவுகணைகள் அனைத்தையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன்சார், சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விருப்பம் இல்லை என்றாலும், தங்களது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்