Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

 மீண்டும் கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

10 மார்கழி 2024 செவ்வாய் 13:38 | பார்வைகள் : 416


'மாநகரம்' படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கியவர், தற்போது ரஜினி நடிப்பில் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் கார்த்தி நடிப்பில் 'கைதி-2' படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், ''ஒரு காலத்தில் கமல்ஹாசனை நேரில் பார்ப்பதே எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அப்படிப்பட்ட அவரை வைத்து ஒரு படம் இயக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. 

மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். அது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்,'' என்று தெரிவித்தார். கூலி படத்தை அடுத்து கைதி-2 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம்-2 படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்