Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : 120 வீதிகளில் மரம் நடுகை!!

பரிஸ் : 120 வீதிகளில் மரம் நடுகை!!

11 மார்கழி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 794


தலைநகர் பரிசில் மரம் நடுகை திட்டம் பகுதி பகுதியாக இடம்பெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக 120 வீதிகளில் மரங்கள் நடப்பட உள்ளன.

2025-2025 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் இந்த மரநடுகை இடம்பெற உள்ளதாகவும், இதற்காக 15,000 மரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க இந்த மர நடுகை அவசியமாகிறது என திட்டத்தை மேற்கொண்டுள்ள பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பசுமைத் திட்டத்தில் இதுவரை 113,000 மரங்கள் பரிசின் பல பகுதிகளில் (பூங்கா, வீதிகள், சதுக்கம்) நடப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்குள் 170,000 மரங்கள் நடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக இந்த குளிர்காலத்தில் 15,000 மரங்கள் 120 வீதிகளின் இரு புறங்களில் நடப்பட உள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்