Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சுப் பெண் இந்தோனேசியாவில் பலி!!

பிரெஞ்சுப் பெண் இந்தோனேசியாவில் பலி!!

11 மார்கழி 2024 புதன் 11:08 | பார்வைகள் : 1133


இந்தோனேசியாவில் பிரெஞ்சுப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அங்கு ஏற்பட்ட புயல் அனர்த்தம் காரணமாக குறித்த பெண் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியான் பாலி தீவில் உள்ள உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான ‘உபுட் குரங்கு காட்டில்’ (forêt des singes d'Ubud) இந்த திங்கட்கிழமை முதல் பெரும் புயல் வீசி வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற 32 வயதுடைய பிரெஜ்ன்சு பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் புயலில் சிக்கி பலியாகியுள்ளார். மரம் முறிந்து அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அவருடன் மற்றுமொரு தென்கொரியாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. 

உபுட் குரங்கு காடானது வருடத்துக்கு பல இலட்சம் சுற்றுலாப்பயணிகளை கவரும் பிரபலமான இடமாகும். அங்கு மிக நீண்ட வால்களையுடைய மக்காக் குரங்குகளை (singes macaques ) அருகில் பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்