சரும சுருக்கத்தை நீக்க எளிய வழிகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10165
பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா?
சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.
• சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க புதினாவை பயன்படுத்தால். மேலும் புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமம் பொலிவாக இருக்க உதவும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.
• சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும். தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
• பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.
• மஞ்சள் தூள் உடன் சிறிதளவு பாலை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
• மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.
• சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
• பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.