ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலானால் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த்
12 மார்கழி 2024 வியாழன் 01:58 | பார்வைகள் : 130
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.5 சதவீதம் உயரும் என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
லோக்சபாவுக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ' ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. இது தொடர்பான திட்டத்தை தயாரிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து கடந்த செப்., மாதம் இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் கூறியதாவது: ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு மித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். இத்திட்டம் எக்கட்சிக்கும் சாதகமானது அல்ல. நாட்டிற்கானது. இது நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால், நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.5 சதவீதம் அதிகரிக்கும். இதனை நான் மட்டும் கூறவில்லை. பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.