RER A மோதி ஒருவர் பலி!!
12 மார்கழி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 586
நேற்று புதன்கிழமை மாலை RER A தொடருந்து மோதி ஒருவர் பலியாகியுள்ளார். அதை அடுத்து ஒரு பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிசம்பர் 11, புதன்கிழமை மாலை Charles de Gaulle–Étoile தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயது குறிப்பிடப்படாத நபர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அவரை RER A தொடருந்து மோதியுள்ளது. இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
சம்பவத்தை அடுத்து இரவு 10.30 மணி வரை Auber - La Défense நிலையங்களிடையே போக்குவரத்து தடைப்பட்டது.