ஜிம்பாப்பே அணியின் அதிரடி வெற்றி
12 மார்கழி 2024 வியாழன் 09:31 | பார்வைகள் : 113
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்பே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணியில் கரீம் ஜனத் (Karim Janat) 54 ஓட்டங்களும், முகமது நபி 44 (27) ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ங்கரவா (Ngarava) 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்பே அணியில் மருமணி 9 ஓட்டங்களிலும், சிக்கந்தர் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் பிரையன் பென்னெட் (Brian Bennett) 49 பந்துகளில் 49 ஓட்டங்கள் குவித்தார்.
ரஷித் கான் ஓவரில் அவர் போல்டு ஆக, ரியல் பர்ல் 10 ஓட்டங்களில் வெளியேறினார். ஜிம்பாப்பே வெற்றிக்கு கடைசி ஓவரில் 1 பந்துக்கு 1 ரன் தேவைப்பட்டது. அஸ்மதுல்லா ஓமார்சாய் அந்த ஓவரை வீசினார்.
ஸ்ட்ரைக்கில் இருந்த தஷின்கா முஸேகிவா மிட்ஆன் திசையில் ட்ரைவ் செய்ய, ஜிம்பாப்பே அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், நபி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.