ஜெய்ஸ்வாலின் செயலால் கோபமடைந்த ரோஹித்
12 மார்கழி 2024 வியாழன் 09:34 | பார்வைகள் : 117
இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் புறப்பட தாமதமானதால், ரோஹித் ஷர்மா கோபமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 14ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறது.
இதற்காக இந்திய அணியினர் அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டனர். வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து பேருந்து மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர ஏனைய வீரர்கள் 8.30 மணிக்கே பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால், ஜெய்ஸ்வால் வெளியே வர 20 நிமிடங்கள் தாமதப்படுத்தியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த ரோஹித் ஷர்மா பேருந்தில் ஏறிவிட்டார். உடனே ஜெய்ஸ்வாலை விட்டுவிட்டு பேருந்து கிளம்பியுள்ளது.
பின்னர் ஹொட்டலுக்கு வெளியே வந்த ஜெய்ஸ்வால் பேருந்து இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
எனினும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் ஏறி அவர் விமான நிலையம் சென்றுள்ளார்.