Centre Pompidou இனை புரனரமைக்க 50 மில்லியன் யூரோக்கள் வழங்கியுள்ள சவுதி அரேபியா!!

12 மார்கழி 2024 வியாழன் 10:21 | பார்வைகள் : 5375
பரிசில் உள்ள் புகழ்பெற்ற Centre Pompidou கட்டிடத்தை புனரமைக்க சவுதி அரேபியா 50 மில்லியன் யுரோக்கள் பணம் வழங்க உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சவுதி அரேபியா அரேபியாவுக்குச் சென்றிருந்தார். அதன்போது சவுதி மன்னருடனான உரையாடவின் போது இந்த தொகை வழங்கப்படுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நவீன கலை காட்சிய கட்டிடமான Centre Pompidou, 2025 தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான 5 வருடங்களில் திருத்தப்பணிகளுக்கு உள்ளாக இருக்கிறது.
இதற்காக 262 மில்லியன் யூரோக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 180 மில்லியன் சொந்த நிதியில் இருந்து Centre Pompidou அறிவித்துள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியா 50 மில்லியன் யூரோக்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.