விசேட செய்தி : புதிய பிரதமர் இன்று மாலை அறிவிக்கப்படலாம்..!!
12 மார்கழி 2024 வியாழன் 10:27 | பார்வைகள் : 477
நாட்டின் புதிய பிரதமரை இன்று மாலை ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை காலை போலந்துக்கு பயண்மாகியிருந்தார். அவர் இன்று மாலை அல்லது இரவு வேளையில் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. அதை அடுத்து நாட்டின் புதிய பிரதமர் யார் என்பதை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சியினருடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த மக்ரோன், இதுவரை எந்த நிலையான முடிவுகளையும் எடுக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புதிய பிரதமர் Nouveau Front populaire கட்சியில் இருந்து தெரிவுசெய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.