SNCF : வேலை நிறுத்தம்.. நாளை போக்குவரத்துக்கள் பாதிப்பு!!
12 மார்கழி 2024 வியாழன் 17:13 | பார்வைகள் : 1138
நாளை டிசம்பர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை SNCF ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட உள்ளன.
RER D சேவைகள் மூன்றில் ஒரு தொடருந்து மட்டுமே இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்றில் இரண்டு RER C சேவைகளும், நான்கில் மூன்று lignes H மற்றும் N வழிச் சேவைகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர ஏனைய தொடருந்து சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும், எந்த தொடருந்து சேவையும் முற்றாக தடைப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டிசம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக RER C உள்ளிட்ட சில தொடருந்து சேவைகள் பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.