Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் போட்டிக்கு இருவரது பெயர்கள் பரிந்துரை!!

பிரதமர் போட்டிக்கு இருவரது பெயர்கள் பரிந்துரை!!

13 மார்கழி 2024 வெள்ளி 04:17 | பார்வைகள் : 1809


நாட்டின் புதிய பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை காலை நியமிக்கப்பட உள்ளார். இந்த பதவிக்கு இருவரது பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக Bernard Cazeneuve அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர் ஜனாதிபதி மக்ரோன் ஆட்சியில் பிரதமராக சிறப்பாக கடமையாற்றியிருந்தவராவார். அவரோடு தற்போது Pau நகரத்தின் முதல்வராக பணியாற்றிவரும் François Bayrou இன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரில் ஒருவர் பிரதமராக அறிவிக்கப்படலாம் அல்லது, வேறு ஒருவரும் அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை காலை போலந்துக்கு பயணமாகியிருந்த ஜனாதிபதி மக்ரோன், அவரது பயணத்தை சுருக்கிக்கொண்டு நேற்று மாலையே அவர் நாடு திரும்பியிருந்தார். நேற்று மாலை அல்லது இரவு புதிய பிரதமரின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) காலை அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்