Paristamil Navigation Paristamil advert login

120 அகதிகள் மீட்பு!

120 அகதிகள் மீட்பு!

13 மார்கழி 2024 வெள்ளி 07:44 | பார்வைகள் : 847


ஆங்கிலக் கால்வாயூடாக பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று டிசம்பர் 12, வியாழக்கிழமை நோர் மற்றும் பா-து-கலே மாவட்டங்களின் கடற்பிராந்தியம் வழியாக பல்வேறு சட்டவிரோத பயணங்கள் இடம்பெற்றன. முதலாவது படகு 52 பேரை ஏற்றியவாறு பயணித்த நிலையில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அகதிகள் கடலில் தத்தளிக்க தொடங்கினர். அவர்களை CROSS Gris-Nez அமைப்பினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் இரண்டாவது படகில் 64 பேர் பயணித்த நிலையில், அவர்களது படகும் இயந்திரக்கோளாறுக்குள் சிக்கி, கடலில் தவித்து நிற்கத்தொடங்கினர். அவர்களையும் CROSS Gris-Nez அதிகாரிகள் மீட்டனர்.

இந்த சட்டவிரோத கடற்பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்