வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி.. துரதிஷ்டம் துரத்துமா..??!!
13 மார்கழி 2024 வெள்ளி 09:35 | பார்வைகள் : 1838
இன்று வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி. வெள்ளிக்கிழமையும், 13 ஆம் திகதியும் ஒன்றாக இணையும் நாளை உலகின் பல நாடுகளில் துரதிஷ்ட்டமான நாள் என கருதப்படுகிறது. பிரான்சும் அதற்கு விதிவிலக்கல்ல.
மதம் சார்பாகவும், கலாச்சாரம் சார்பாகவும் ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு கருத்தாக்கம் உள்ளது. அவை அனைத்தும் பொதுவாக இணைப்பது, ‘அன்றைய நாளில் கெட்ட விஷயங்கள் எதுவும் நடந்துவிடும்” எனும் அச்சம் தான்.
கிறிஸ்துவத்தில் வெள்ளிக்கிழமை துரதிஷ்ட்டமான நாள் என நீண்டகாலமாக கருதப்படுகிறது. அதேபோன்று 13 ஆம் இலக்கமும் அதிஷ்ட்டமற்ற எண்ணாக கருதப்படுகிறது. இவை இரண்டும் சேரும் போது மேலும் மோசமான நாளாக அமையும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
ஆனால், கிழமையிலும், எண்களிலும் எதுவும் இல்லை. அது மூடநம்பிக்கை என கருத்தியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
13 ஆம் இலக்கம் அதிஷ்ட்டமானது என கருதுபவர்கள் பலர் இருக்கின்றனர். பிரெஞ்சு அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு நிறுவனமான La Française des Jeux (FDJ) வெளியிட்ட ஆய்வில், சீட்டிழுப்பில் பங்குபெறுபவர்களில் ஐவரில் ஒருவர் 13 ஆம் இலக்கத்தை அதிஷ்ட்டம் என கருதுவதாக தெரியவந்துள்ளது.