அல்லு அர்ஜுன் கைது.. திரையுலகில் பரபரப்பு..!
13 மார்கழி 2024 வெள்ளி 10:28 | பார்வைகள் : 201
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் நெரிசல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வருகை தந்ததால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தான் பெண் உயிரிழந்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே தியேட்டர் மேனேஜர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அல்லு அர்ஜுன் வருகையை முன்கூட்டியே தெரிவித்திருந்த போதும் தியேட்டர் நிர்வாகம் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து தரவில்லை என்று காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தனது வீட்டில் வைத்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாகவும் அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.