இலங்கை வீரர் மீதான தடை நீக்கம்! அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடலாம்
13 மார்கழி 2024 வெள்ளி 10:40 | பார்வைகள் : 125
இலங்கை துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல, ஊக்கமருந்து குற்றச்சாட்டினைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டார்.
எனினும் டிக்வெல்ல தன் மீதான தடைக்கு மேல்முறையீடு செய்தார். அதில் "போட்டி காலத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் உட்கொள்ளப்படவில்லை என்றார்.
அத்துடன் அடையாளம் காணப்பட்ட பொருள் விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்கு தொடர்பில்லாதது என்பதைக் காட்ட பொருத்தமான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், மேல்முறையீட்டின் வெற்றிகரமான வெளிப்பாட்டின்படி அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நிரோஷன் டிக்வெல்ல (Niroshan Dickwella) மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.