பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் தீ..!!
13 மார்கழி 2024 வெள்ளி 10:53 | பார்வைகள் : 587
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை காலை தீ பரவியது. 30 வரையான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
avenue d'Iéna பகுதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்தில் காலை 10 மணி அளவில் தீடீரென தீ பரவியுள்ளது. அதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். வீட்டின் ஜன்னல் வழியாக பெருமளவில் கரும்புகை மேலெழுந்தது.
தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 30 வரையான தீயணைப்பு வீரர்கள் களத்தில் இருந்த்தாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.