Paristamil Navigation Paristamil advert login

Seine-et-Marne : மகிழுந்து ஒன்றில் இருந்து சடலம் மீட்பு!

Seine-et-Marne : மகிழுந்து ஒன்றில் இருந்து சடலம் மீட்பு!

14 மார்கழி 2024 சனி 16:39 | பார்வைகள் : 349


நாற்பது வயதுடைய ஒருவருடைய சடலம், மகிழுந்து ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. Montévrain (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிசம்பர் 13, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீதி அருகே தரித்து நின்ற மகிழுந்து ஒன்றில் இருந்து 42 வயதுடைய ஆண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். அவரது கழுத்தின் இடது பக்கத்தில் வெட்டுக்காயம் இருந்ததாகவும், மகிழுந்துக்குள்ளே இரத்தக்கறையுடன் கத்தி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் உடற்கூறு பரிசோதனைகளுக்குப் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்