Paristamil Navigation Paristamil advert login

இன்று உருவாகுது புதிய காற்றழுத்தம்: கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை

இன்று உருவாகுது புதிய காற்றழுத்தம்: கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை

15 மார்கழி 2024 ஞாயிறு 03:48 | பார்வைகள் : 339


தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று(டிச., 15) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளை (டிச., 16) முதல் கன மழை துவங்கும்,' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்த மையத்தின் அறிக்கை: தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதி மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அப்பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி அடுத்த இரு நாட்களில் நகரக்கூடும். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் நாளை முதல் கன மழை துவங்க வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., 20 வரை மிதமான மழை தொடரும்.

நாளை

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள்

நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் நாளை மறுநாள், மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழை

தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மறுநாள் கன மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்