Paristamil Navigation Paristamil advert login

இரண்டு நாட்களில் 900 அகதிகள் கடற்பயணம்!

இரண்டு நாட்களில் 900 அகதிகள் கடற்பயணம்!

15 மார்கழி 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 504


இரண்டு நாட்களில் 900 இற்கும் மேற்பட்ட அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் (48 மணிநேரத்தில்) 907 அகதிகள் படகுகளில் பிரித்தானியா நோக்கி பயணித்ததாகவும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பிரித்தானியாவின் Home Office அறிவித்துள்ளது.

சராசரியாக படகு ஒன்றுக்கு 65 பேர் கொண்டு, மொத்தமாக 14 படகுகள் இவ்வாறாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 35,000 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளதாகவும், தெரியவந்த தகவல்களின் படி 72 பெர் இவ்வருடத்தில் இதுவரை பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்