Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளம் : எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

15 மார்கழி 2024 ஞாயிறு 18:36 | பார்வைகள் : 404


வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 16, நாளை திங்கட்கிழமை காலை முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக Météo-France சற்று முன்னர் அறிவித்துள்ளது.

வடக்கில் Aisne மற்றும் Oise ஆகிய மாவட்டங்களுக்கும், தென் மேற்கில் Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய மாவட்டங்களுக்கும், கிழக்கில் Savoie, Haute-Savoie, Isère மற்றும் Hautes-Alpes ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பொழிவு இடம்பெறுவதாகவும், அங்கு வெள்ள அனர்த்தம் காரணமாக ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்