அதிபரான பின் முதல்முறை இந்தியா வந்த அநுரகுமார திசநாயகே!
16 மார்கழி 2024 திங்கள் 03:04 | பார்வைகள் : 259
அரசு முறைப்பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே இந்தியா வந்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே அமோக வெற்றி பெற்றார். ஏ.கே.டி. என்று அந்நாட்டு அரசியலில் அழைக்கப்படும் அவரின் வெற்றியை மக்கள் உற்சாக கொண்டாடினர்.
தேர்தலில் வென்று அதிபரான அநுரகுமார திசநாயகே, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அவரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
அரசு முறை சுற்றுப்பயணத்தில் அநுரகுமார திசநாயகே, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேச உள்ளார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
புதுடில்லியில் நடக்கும் தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, புத்த கயாவுக்கும் செல்லும் வகையில் அநுரகுமார திசநாயகே பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.