Paristamil Navigation Paristamil advert login

வட மேற்கு  லண்டனில்  பயங்கர துப்பாக்கி சூடு - ஒருவர் பலி! 

வட மேற்கு  லண்டனில்  பயங்கர துப்பாக்கி சூடு - ஒருவர் பலி! 

16 மார்கழி 2024 திங்கள் 09:30 | பார்வைகள் : 416


வடமேற்கு லண்டனின் ஹார்லெஸ்டன்(Harlesden) பகுதியில் சனிக்கிழமை மாலை கொடூரமான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் Gifford சாலையில் இரவு 9:15 மணி அளவில் நிகழ்ந்த நிலையில், துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் விரைந்தனர்.

அங்கு துப்பாக்கி சூடு காயங்களுக்கு உள்ளாகியிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கண்டுபிடித்தனர்.

அவருக்கு மருத்துவப் பணியாளர்கள் தீவிர சிகிச்சைகள் செய்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் 30 வயதுக்கு உட்பட்ட இரு ஆண்களும் காயமடைந்தனர். ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மற்றொருவரின் காயங்கள் ஆபத்தானவையாக இல்லை.

சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கு விசாரணையை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்காக சம்பவம் நடந்த பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்