விராட் கோஹ்லியை அவுட் செய்வதில் சாதனை செய்த பவுலர்
16 மார்கழி 2024 திங்கள் 12:31 | பார்வைகள் : 132
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் விராட் கோஹ்லி ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
காபாவில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் நடந்து வருகிறது.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ஓட்டங்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 101 ஓட்டங்களும் எடுத்தனர். ஜஸ்பிரித் பும்ரா 76 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களில் ஸ்டார்க் ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து கில் 1 ரன்னில் வெளியேற, விராட் கோஹ்லியும் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் வீசிய பந்தில் கேரியிடம் கேட்ச் கொடுத்து கோஹ்லி வெளியேறினார்.
இதன்மூலம் கோஹ்லியை 11 முறை அவுட்டாக்கிய பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஹேசல்வுட் (Hazelwood) பெற்றார்.
நியூசிலாந்தின் டிம் சௌதீ 11 முறையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 முறையும், மொயீன் அலி 10 முறையும் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்துள்ளனர்.
கோஹ்லி தொடர்ச்சியாக விரைவில் அவுட் ஆவதால், அவரது ரசிகர்கள் விரக்தியடைந்து கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.