Mayotte மீண்டு வரும்.. நாடாளுமன்றத்தில் அஞ்சலி!!
16 மார்கழி 2024 திங்கள் 16:24 | பார்வைகள் : 912
பிரெஞ்சுத் தீவான Mayotte இனை பெரும் சூறாவளி தாக்கியிருந்தது. பதின்நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், சூறாவளியினால் கொல்லப்பட்ட மக்களுக்கு இன்று டிசம்பர் 16, திங்கட்கிழமை காலை பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. "சூறாவளியினால் கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. முழுமையான சேத விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்று Mayotte அழிந்திருக்கலாம். ஆனால் மீண்டும் வரும்!" என நாடாளுமன்றத்தலைவர் Yaël Braun-Pivet தனது அஞ்சலிக் குறிப்பில் தெரிவித்தார்.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்கள், சபாநாயகர் என அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை 6 மணிக்கு இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுகிறார்.