பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பிரதமர்!
16 மார்கழி 2024 திங்கள் 17:05 | பார்வைகள் : 1285
பிரதமராக பொறுப்பேற்றுள்ள François Bayrou, நாளை டிசம்பர் 17, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
பிரதமர் ஒருவர் பதவியேற்று ‘பொது கொள்கை அறிக்கை’ உரை ஒன்றை நிகழ்த்துவதற்கு முன்னரே பாராளுமன்றத்தில் பதிலளிக்க கோரப்படுவது மிக அரிதான நிகழ்வாகும். சபாநாயகரும், பாராளுமன்ற தலைவர்களும் உறுப்பினர்களாலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரதமர் François Bayrou பதிலளிக்க உள்ளார்.
அரசாங்கத்தில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக கருதப்படும் நேரத்தில், அரசாங்கத்தை தனி ஒரு நபராக தோளில் சுமக்கிறார் François Bayrou. தற்போதைய சூழ்நிலை தொடர்பிலும், அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் இந்த கேள்விகள் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அரசின் பொது கொள்கை அறிக்கை வாசிப்பு அடுத்த சில நாட்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.