மாதம் €20,000 யூரோக்கள் வீதம் 30 ஆண்டுகளுக்கு.. - ஓய்வூதியம் பெறுபவருக்கு அடித்த அதிஷ்ட்டம்!!
16 மார்கழி 2024 திங்கள் 17:36 | பார்வைகள் : 2801
மாதம் ஒன்றுக்கு 20,000 யூரோக்கள் வீதம், 30 ஆண்டுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் EuroDreams அதிஷ்ட்டம் Nord மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளது.
நவம்பர் 21 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது. 2.50 யூரோக்கள் மதிப்புள்ள சீட்டு ஒன்றை பெற்றுக்கொண்ட ஓய்வூதியம் பெறும் நபர் ஒருவர், அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதாமாதம் இந்த பெரும் தொகை பணத்தை பெற உள்ளார்.
50 இலக்கங்களில் மிகச் சரியான 6 இலக்கங்களை தெரிவு செய்யவேண்டும் என்பது மட்டுமே இந்த அதிஷ்ட்டலாபச் சீட்டின் நிபந்தனையாகும். யூரோமில்லியன் சீட்டிழுப்பை நடாத்தும் La Française des Jeux நிறுவனம் இந்த EuroDreams இனை இந்த வருட தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
**
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பங்குபெறுவது தனிநபர் விருப்பமாகும். இதில் பண இழப்பு, விளையாட்டுக்கு அடிமையாகுதல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.