Paristamil Navigation Paristamil advert login

உள்துறை அமைச்சகத்தில் ஜனாதிபதி தலைமையில் அவசரச் சந்திப்பு!

உள்துறை அமைச்சகத்தில் ஜனாதிபதி தலைமையில் அவசரச் சந்திப்பு!

16 மார்கழி 2024 திங்கள் 17:45 | பார்வைகள் : 1331


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்துறை அமைச்சகத்தில் அவசரச் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார். Pau நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் François Bayrou காணொளி அழைப்பு மூலமாக இதில் பங்கேற்குள்ளார்.

Mayotte தீவில் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அது தொடர்பான நிலமைகளை ஆராயவே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகவும், உள்துறை அமைச்சர் Bruno Retailleau, Mayotte தீவுக்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டுக்கொண்டு சற்று முன்னர் பிரான்சுக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமானது.

Mayotte தீவில் பதிவான இந்த சூறாவளியினால் கிட்டத்தட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்