Paristamil Navigation Paristamil advert login

Mayotte சூறாவளி - 'தேசிய துக்கமாக' அறிவிப்பு! - ஜனாதிபதி பயணிக்கிறார்..!

Mayotte சூறாவளி - 'தேசிய துக்கமாக' அறிவிப்பு! - ஜனாதிபதி பயணிக்கிறார்..!

16 மார்கழி 2024 திங்கள் 21:18 | பார்வைகள் : 4594


Mayotte தீவினை சூறாவளி தாக்கி பெரும் சேதத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதனை 'தேசிய துக்கமாக' (deuil national) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார்.

இன்று மாலை உள்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மக்ரோன், விரைவில் Mayotte தீவுக்குச் செல்ல உள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.

"இன்று மாலை, அவசரகால கூட்டத்தின் போது, ​​Mayotte வசிப்பவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து அவசர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, மாநிலத்தின் உதவி எப்பொதும் இருக்கும் என்பதை நான்  உறுதி செய்தேன்" என தனது X சமூகத் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

"அடுத்துவரும் நாட்களில் நான் அங்கு நேரில் பயணிக்க உள்ளேன்!" எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் Bruno Retailleau அங்கு நேரில் சென்று இன்று மாலை நாடு திரும்பியிருந்தார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், 'தீவு மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்