La Courneuve : வீதியில் துப்பாக்கிச்சூடு.. ஆயுதமும்.. ஆயுததாரிகளும் கைது!
17 மார்கழி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1110
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை La Courneuve (Seine-Saint-Denis) நகரில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை 10 மணி அளவில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து Rue de la Marseillaise வீதிக்குச் சென்ற காவல்துறையினர், அங்கு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை உறுதி செய்தனர். ஆனால் அங்கு ஆயுததாரிகளோ, பாதிக்கப்பட்டவர்களோ அங்கு இருக்கவில்லை.
அதை அடுத்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற வீதிக்கு அருகே உள்ள Rue de Verdun வீதியில் இருந்து சில துப்பாக்கிச்சன்னங்களை மீட்டனர். அங்கு பதுங்கியிருந்த ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்ததனர். அத்தோடு வீதிக்கருகில் இருந்து புதரில் M16 ரைஃபிள் ரக துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்து மீட்டனர்.
இரண்டாவதாக மகிழுந்து சாரதி ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.