Paristamil Navigation Paristamil advert login

காசாவில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

காசாவில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

17 மார்கழி 2024 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 320


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 மாதங்களாக போர் நீடித்து வருகின்றது.

போரில் காசா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மட்டும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

117,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டதாகவும், 106,962 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் அல்லது மருத்துவ ஊழியர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் புதையுண்டிருப்பதால் உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்தாலும், இப்போது நடைபெறும் போரானது மிகக் கொடிய போராக உள்ளது. 

போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் மக்கள் இருந்த நிலையில், போரில் 2 சதவீதம் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்