பரிஸ் : உயர்கல்வி பாடசாலை அருகே மோதல்.. - சிறுவன் பலி!!

17 மார்கழி 2024 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 9021
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அருகே இடம்பெற்ற மோதலில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் rue Corvisart வீதியில் உள்ள Lycée Rodin பாடசாலைக்கு அருகே இந்த மோதல் இன்று டிசம்பர் 17, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மோதலில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிகிச்சை பலனின்றி அவன் காலை 9.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
13 ஆம் வட்டார நகர முதல்வர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025