மகளிர் பிரிமியர் லீக் 2025 ஏலம்: தக்கவைக்கப்பட்டுள்ள சாமரி அத்தபத்து

17 மார்கழி 2024 செவ்வாய் 10:31 | பார்வைகள் : 2254
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 ஆம் ஆண்டு பருவத்துக்கான ஏலம் இந்திய பெங்களூரில் நடைபெற்றது.
இதில் ரோயல் செல்ஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய ஐந்து அணிகள் ஏலத்தில் பங்கு பெற்று வீராங்கனைகளை வாங்கியுள்ளன.
இதில் ஒவ்வொரு அணிக்கும் 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.
இதன்படி இந்த ஏலத்தில் மொத்தமாக 19 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவார்கள்.
இதற்காக மொத்தமாக ஒன்பது கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு அணியினால் பிரேமா ராவத் 1.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியால், ஜி கமாலினிக்கு 1.60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் ஜெயண்ட்ஸால் சிம்ரன் சேக் 1.90 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
டியான்ட்ரா டாட்டின் 1.70 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேஸ் வொரியர்ஸ் அணியால் இலங்கையின் அணித்தலைவி சாமரி அத்தபத்து தக்கவைக்கப்பட்டுள்ளார்.